முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்முச்சி சீசன் 2 இணைய தொடர்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஓடிடி  தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் “அம்முச்சி” என்ற தொடர் முதல் சீசனில் பலரது பாராட்டுக்களையும் பெற்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தது. இதனையடுத்து இப்போது இந்தகுழு அம்முச்சி சீசன் 2 வில் மீண்டும் களம் இறங்கி உள்ளது. இந்த டிரமா காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது. கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட கதை மாந்தர்கள், குடும்பங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான மோதல்கள் ஆகிய கதைகருக்களின் வழியாக இந்தக்கதை பயணிக்கிறது. அம்முச்சியைப் பார்ப்பது கிராமங்களில் கோயில் திருவிழாவிற்குச் செல்வது போன்ற ஒரு அனுபவமாக இருக்கும் என  அம்முச்சி சீசன் 2 தொடரின் இயக்குநர் ராஜேஷ் காளிசாமி கூறியிருக்கிறார். பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுத அருண், சசி, மித்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் சின்னமணி டைட்டில் ரோலில் அம்முச்சியாகவும்  நடிக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து