முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டசபை தேர்தல்: கோரக்பூரில் யோகியை எதிர்த்து களம் காணும் 'பீம் ஆர்மி' தலைவர்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

உத்தரப் பிரதேச தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் 'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத்.

உத்தரப் பிரதேச தேர்தலில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் போட்டியிடுகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பதால் அவரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் குறித்து எதிர்ப்பார்ப்புகள் எழுந்தன. சமாஜ்வாடி கட்சி வலுவான வேட்பாளரை களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத், யோகியை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

சில ஆண்டுகள் முன் மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜூம்மா மசூதியில் நடந்த பேரணிக்கு முக்கிய காரணகர்த்தவாக அறியப்பட்டவர் சந்திரசேகர் ஆசாத். அந்தப் பேரணியில் தனது கையில் அரசியலமைப்பின் நகலையும், அம்பேத்கரின் புகைப்படத்தையும் ஏந்திக்கொண்டு முழக்கமிட்டது அவரை வெகு பிரபலமாக்கியது. சந்திரசேகர் ஆசாத் ராவண் என்றும் அழைக்கப்படும் இவரின் பூர்வீகம் மேற்கு உத்தரப் பிரதேசமான சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி என்ற கிராமம்.

டெல்லி ஜூம்மா மசூதி பேரணி நாடு முழுவதும் அவரை பிரபலப்படுத்தினாலும், அதற்கு முன்பாகவே அவர் உத்தரப் பிரதேச மக்கள் மத்தியில், தனது 'பீம் ஆர்மி' அமைப்பு மூலமாகவும், சமூகப் பணிகள் மூலமாகவும் பிரபலமாக வலம்வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆசாத்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பில் இருந்து சில நாட்களிலேயே பின்வாங்கினார். இந்தநிலையில்தான் தற்போது யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சந்திரசேகர் ஆசாத் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து