முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

126-வது பிறந்த நாள்: சென்னையில் நேதாஜி சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்தநாளினை முன்னிட்டு இன்று கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் தனித்துவம் மிக்கவரும், வங்கத்துச் சிங்கம் என்றும், மக்களால் இன்றும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்தநாளினை முன்னிட்டு இன்று (23-ம் தேதி) காலை 9.30 மணியளவில், கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து