முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று பரவல் சென்னையிலும் குறைந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கொரோனா தொற்று பரவல் அகில இந்திய அளவில் சற்று சரிந்த நிலையில் சென்னையிலும் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்தது ஆனால் தற்போது 7 ஆயிரமாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,

சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்தது ஆனால் தற்போது 7 ஆயிரமாக சற்று குறைந்துள்ளது. சென்னையில் 94.9% பேருக்கு முதல் தவணை செலுத்தி இந்தியாவில் உள்ள பெருநகர மாநகராட்சியில் அதிக தடுப்பூசி செலுத்தியதில் முன்னிலை வகிக்கிறது. சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்தவதில் சிக்கல் ஏற்பட்டால் 104 என்ற எண்ணின் மூலம் புகார் அளித்து தடுப்பூசி செலுத்திகொள்ளலாம் என அவர் தெரிவித்தார். 

3.32 கோடி தடுப்பூசிகள் மெகா தடுப்பூசி முகாம் மூலம் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18வயதுடைய 25 லட்சம் பேருக்கு  இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய 5.56 லட்சம் பேரில் 1.84 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 600 சிறப்பு முகாம் வரும் வியாழக்கிழமை அமைத்து போடப்படும். இதுவரை தமிழகத்தில் 9.17 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதே கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  தடுப்பூசி செலுத்தியுள்ளதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. முழுமையான இறப்பு விகிதத்தை குறைக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தடுப்பூசி போடாமலே போட்டதாக சான்றிதழ் எடுத்து வைத்து கொள்பவர்களை கண்காணிப்பது என்பது சற்று கடினமான ஒன்றாக இருந்தாலும், மக்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டதால் தான் தடுப்பூசி முகாம்ககை அரசு நடத்தி வருகிறது. உங்களை காப்பாற்றுவதற்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.ஒரு தடுப்பூசியின் விலை 1100 ரூபாய் இருக்கும் நிலையில், மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரசாங்கம் தடுப்பூசி முகாம் நடத்துகிறது. எனவே தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் கொடுக்க வேண்டாம் வாங்க வேண்டாம் என்பதை சிந்தித்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உள் மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்தது தற்போது 7 ஆயிரமாக சற்று குறைந்துள்ளது என்றார். 15 - 18 வயகுட்பட்டோர் வயது சான்றிதழை காண்பித்து அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்‌சின் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்ற அவர், உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து