முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதேச முதல்வர் வேட்பாளரா? வெளியான தகவலுக்கு பிரியங்கா மறுப்பு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா நிறுதப்படலாம் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந்தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பணிகளை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, கட்சியின் தேர்தல் அறிக்கைகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.

இதில் மகளிருக்கான தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்ட அவர், இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். டெல்லியில் இருந்து தனது சகோதரரும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியுடன் இணைந்து காணொலி காட்சி மூலம் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார்.

தொடர்ந்து  உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் நீங்கள்தானா? என செய்தியாளர்கள் கேட்டபோது, ‘காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு ஏதாவது முகம் உங்களுக்கு தெரிகிறதா?’ என பதில் கேள்வி கேட்டார். ‘எனது முகத்தை நீங்கள் எங்கும் பார்க்கிறீர்கள்’ எனவும் கூறினார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, இன்னும் முடிவு செய்யவில்லை எனவும், அது குறித்து முடிவு செய்த பின்னரே தெரியவரும் எனவும் கூறினார். இதனை பிரியங்கா காந்தி நேற்று மறுத்து உள்ளார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு நான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருபோதும் கூறவில்லை. ஒரே மாதிரியான கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டதால் எரிச்சல் அடைந்ததால்  முகத்தில் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறினார். 

அவர் கூறியதாவது.,  நான் (உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரசின்) (உத்தரபிரதேச முதல்வர்) முகம் என்று நான் சொல்லவில்லை... நீங்கள் அனைவரும் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டதால் (எனது முகத்தை நீங்கள் எங்கும் பார்க்கலாம்) எரிச்சலில் சொன்னேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து