முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 2022 ஏலத்துக்கு 318 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 1,214 பேர் பதிவு பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வ தகவல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் 2022 ஏலத்துக்கு 318 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 1,214 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

2 புதிய அணிகள்...

2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐ.பி.எல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

கேப்டன்கள் நியமனம்...

புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியானது. லக்னோ அணியில் லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஸ்டோய்னிஸ் (ரூ.9.2 கோடி), பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரும், அகமதாபாத் அணியில் ஹர்த்திக் பாண்ட்யா, ரஷித் கான் தலா (ரூ.15 கோடி), சுப்மன் கில் (ரூ.8 கோடி) ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ராகுல் லக்னோ அணிக்கும், ஹர்த்திக் பாண்ட்யா அகமதாபாத் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

318 வெளிநாட்டு... 

ஐ.பி.எல் ஏலத்துக்குப் பதிவு செய்த வீரர்கள் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது., ஐ.பி.எல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக வீரர்கள் பதிவு செய்வது ஜனவரி 20 உடன் முடிவடைந்தது. 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என 1214 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளப் பதிவு செய்துள்ளார்கள்.

மெகா ஏலம் இரு நாள்களுக்கு நடக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 270 வீரர்கள், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகாத 903 வீரர்கள், 41 அசோசியேட் வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதன் விவரங்கள்: 61 - இந்திய வீரர்கள், 209 - வெளிநாட்டு வீரர்கள், 41 - அசோசியேட் வீரர்கள், 143 - ஐ.பி.எல் போட்டியில் முன்பு விளையாடி, இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள்,  9 -ஐ.பி.எல் போட்டியில் முன்பு விளையாடி இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள்,  692 - உள்ளூர் இந்திய வீரர்கள்,  62 - சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள், குறிப்பு - ஒவ்வொரு அணியும் 25 வீரர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஏலத்தில் 217 வீரர்கள் பங்கேற்கவேண்டும். அதில் 70 பேர் வெளிநாட்டு வீரர்கள் 

கிறிஸ் கெய்ல் இல்லை...

இந்த போட்டிக்கான வீரர்கள் தக்கவைப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. அதன்படி 8 அணிகளும் 27 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. ஐ.பி.எல். போட்டியில் அதிரடி வீரரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் ஏலப்பட்டியலில் இடம்பெறவில்லை. ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் (இங்கிலாந்து) ஆகிய வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை. 10 அணிகளும் இதுவரை 33 வீரர்களுக்காக ரூ.338 கோடியை செலவழித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வீரர்கள்:

  • 1) ஆப்கானிஸ்தான் - 20 வீரர்கள்.
  • 2) ஆஸ்திரேலியா - 59 வீரர்கள்.
  • 3) வங்கதேசம் - 9 வீரர்கள்.
  • 4) இங்கிலாந்து - 30 வீரர்கள்.
  • 5) அயர்லாந்து - 3 வீரர்கள்.
  • 6) நியூசிலாந்து - 29 வீரர்கள்.
  • 7) தென்னாப்பிரிக்கா - 48 வீரர்கள்.
  • 8) இலங்கை - 36 வீரர்கள்.
  • 9) மே.இ. தீவுகள் - 41 வீரர்கள்.
  • 10) ஜிம்பாப்வே - 2 வீரர்கள்.
  • 11) பூடான் - 1 வீரர்.
  • 12) நமீபியா - 5 வீரர்கள்.
  • 13) நேபாளம் - 15 வீரர்கள்.
  • 14) நெதர்லாந்து - 1 வீரர்.
  • 15) ஓமன் - 3 வீரர்கள்.
  • 16) ஸ்காட்லாந்து - 1 வீரர்.
  • 17) ஐக்கிய அரபு அமீரகம் - 1 வீரர்
  • 18) அமெரிக்கா - 14 வீரர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து