முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருந்தன்மை காட்டிய ஏவிஎம் வாரிசு நடிகர்

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      சினிமா
Aryan-Sham 2022 04 18

Source: provided

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘அந்தநாள்’. இயக்குனர் வி.வி இயக்கியிருக்கும் இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகன் ஆர்யன் ஷாம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அந்தநாள் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், இந்திய அரசியலமைப்பில் நரபலி என்பதற்கு அனுமதியில்லை என்பதால், இப்படத்திற்கு சான்றிதழ் வழங்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டியை அணுகினோம். அவர்கள் சில திருத்தங்களைக் கூறினார்கள். அவற்றைச் செய்தவுடன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத ஒரு வித்யாசமான படமாக ‘அந்தநாள்’ இருக்கும் என்றார். அந்தநாள் படம் தவிர பிரம்மாண்ட நாயகன் என்கிற படத்தில் நான் திருப்பதி ஏழுமலையான் வேடத்தில் நடித்திருக்கிறேன். என் நடிப்பையும் தோற்றத்தையும் பார்த்து திருப்பதி தேவஸ்தானம் வெகுவாகப் பாராட்டியது. அவர்கள் எனக்கு அளித்த பாராட்டுக் கடிதத்தில் யூத் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது சிலருக்குப் பிடிக்கவில்லை, உடனே என்னை மிரட்டத் தொடங்கிவிட்டார்கள் என வேதனைப்பட்டார். ஆனால் என்ன பிரச்சனை வந்தாலும் அனைத்தையும் சமாளித்து திரைத்துறையில் வெற்றி பெறுவேன்” என்றார். மேலும், தன்னை வைத்து சைக்கோ என்ற படத்தை எடுப்பதற்காக இயக்குநர் மிஷ்கினுக்கு கொடுத்த ரூ.1 கோடி முன் தொகையை இயக்குநர் மிஷ்கின் தன்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். ஆனாலும் அவரிடம் எந்த வித வட்டியும் வாங்கவில்லை என்று பெருந்தன்மையோடு குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து