முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவலால் பொருளாதார தாக்கம் இந்தியா மீள 13 ஆண்டுகள் வரை ஆகலாம்: ரிசர்வ் வங்கி கணிப்பு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      வர்த்தகம்
RBI-2022-02-10

கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

இந்திய கரன்சி மற்றும் நிதி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2021-ம் ஆண்டில் மைனஸ் 6.6 சதவீதம் என்று பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்ததை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2023-ம் ஆண்டுக்கு பிறகு பொருளாதாரம் வருடத்திற்கு 7.5சதவீதம் வளர்ச்சி அடையும் என்று கருத்தில் கொண்டால் கொரோனா காலத்தில் சந்தித்த இழப்புகளை 2034 - 2035-ம் ஆண்டில் தான் சரி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சி அரசின் ஊக்க நடவடிக்கைகளை சார்ந்தே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் உக்ரைனில் நடைபெற்று வரும் போர், பணவீக்கம் ஆகியவை புதிய சவால்களாக உருவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து