முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 448 ரூபாய் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 5 மே 2022      வர்த்தகம்
5 Ram 17

Source: provided

சென்னை:சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,912-க்கு விற்பனையானது.

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது. அதாவது ஒரு கிராம் ரூ.4,796 ஆகவும், ஒரு பவுன் ரூ.38,368 ஆகவும் விற்பனையானது. தங்கம் விற்பனையும் அமோகமாக நடந்தது. நாடு 50 டன் தங்கமும் தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கமும் விற்பனையானது. அட்சய திருதியை முடிந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென்று உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.59 உயர்ந்து ரூ.4,864 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.448 அதிகரித்து ரூ.39,912 ஆகவும் உயர்ந்து விற்பனையானது.

இந்த திடீர் விலை உயர்வு தங்க நகை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அட்சய திருதியையின் போது விலை குறைந்ததால் மேலும் குறையும். பின்னர் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து