முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடிடி-யில் வெளியாகும் நயன்தாரா படம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      சினிமா
Nayanthara 2022 05-10

Source: provided

நயன்தாரா நடித்துள்ள ஆக்ஸிஜன் (O2) படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் அறிவித்துள்ளது. உயிர்கள் வாழ அடிப்படை தேவையான ஆக்ஸிஜனை குறிக்கும் O2 அறிவியல் பெயரில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.கே. விக்னேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். கடந்த ஆண்டில் இருந்தே இந்தப் படம் ஓடிடியில் வெளியாகுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் O2 வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் அறிவித்துள்ளது. நயன்தாரா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் சிரஞ்சீவியின் காட் ஃபாதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இதனை பிரபல இயக்குனரும், ஜெயன் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா இயக்கி வருகிறார்.முதன்முறையாக தெலுங்கில் சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதை தவிர்த்து, கோல்டு, கனெக்ட், அஜித் 62 உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து