முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் ஜீரோ கொரோனா திட்டம்: உலக சுகாதார அமைப்பு விமர்சனம்

வியாழக்கிழமை, 12 மே 2022      உலகம்
world-health-12-5-22

Source: provided

நியூயார்க் : சீனாவின் ஜீரோ கொரோனா திட்டத்தை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் 2022-ம் ஆண்டு முதலே குறைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று அதிகரித்தது. இதனை தொடர்ந்து கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது. இதற்கு உலகளவில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான சீனாவின் திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் கூறும் போது, 

ஜீரோ கொரோனா கொள்கையை சீன அரசு அமல்படுத்தி உள்ளது . இதன் மூலம் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதுதான் நோக்கம் ஆகும். இதற்காக கடுமையான ஊரடங்குகளை சீனா அமல்படுத்தியுள்ளது. இது ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அமலில் உள்ளது. இதற்கு எதிராக மக்கள் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இவற்றை எல்லாம் சீன அரசு கருத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து