முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா முதல்வருடன் சந்திப்பு எதிரொலி: ராஷ்டிரிய சமிதி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்?

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      இந்தியா
Prakashraj 2022 05 13

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் தெலுங்கானா மாநிலத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெலுங்கானாவில் மொத்தமுள்ள ஏழு ராஜ்யசபா எம்.பி. பதவிகளும் ஆளும்  தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிடம் உள்ளன. எம்.பி.க்கள் வோடிடெலா  லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோர் ஜூன் 21-ம்  தேதி ஓய்வு பெறுவதால், மாநிலத்தில் இரண்டு எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. 

இந்நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பின்படி தெலுங்கானாவில்  இரு இடங்களுக்கான எம்.பி. தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பா.ஜ.க. இடையே 2 எம்.பி. பதவிகள் யார் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர ராவை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், அவரது எர்ரவல்லி பண்ணை வீட்டில் சந்தித்துப் பேசினார். அதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பிரகாஷ் ராஜ், முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தார். 

அதனால் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் மனுதாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் பெயரும் தெலுங்கானாவில் அடிபடுகிறது.

இவர் பா.ஜ.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் தற்போதுள்ள பலத்தின்படி, ஆளும் கட்சி போட்டியின்றி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து