முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அணியை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் சென்னையும் வெளியேறியது

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      விளையாட்டு
CSK 2022 05 13

நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் அணியாக மும்பை அணி வெளியேறிய நிலையில், தற்போது சென்னை அணியும் லீக் போட்டியோடு வெளியேறியது.

97 ரன்களுக்கு அவுட்...

ஐபிஎல் 15-வது சீசனின் லீக் ஆட்டங்கள் மும்பையில் நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

9-வது இடத்தில்...

மும்பை அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 3ல் மட்டும் வென்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளதால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்தது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4ல் மட்டும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

வாய்ப்பை தடுத்தது...

மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், நேற்று சென்னை அணியை தோற்கடித்து அந்த அணியையும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தடுத்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை  அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியில், தொடக்க வீரர் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

டோனி மட்டும்...

பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ,ராபின் உத்தப்பா 1  ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட்  7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் களம் இறங்கிய கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 

98 ரன்கள் இலக்கு...

இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  அதிகபட்சமாக டோனி 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர் இசான் கிஷன் 6 ரன்னுக்கும், கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். டேனியல் சாம்ஸ் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.  திலக் வர்மா 34 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஹிருத்திக் ஷோக்கீன் 18 ரன் அடித்தார்.  டிம் டேவிட் 16 ரன் எடுத்து களத்தில் இருந்தார்.

முகேஷ் சவுத்ரி... 

 

மும்பை அணி 14.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார். சென்னை அணி தோல்வி அடைந்ததால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து