முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அணிக்கு எதிரான தோல்வி: வெளிப்படையாக பேசிய டோனி..! ரவீந்திர ஜடேஜாவுக்கும் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      விளையாட்டு
Tony 2022 05 13

மும்பை அணிக்கு எதிரான தோல்வி குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் கேப்டன் டோனி. மேலும் ரவீந்திர ஜடேஜா குறித்து தனது கருத்தை பதிவு செய்தார்.

மும்பை வெற்றி...

ஐ.பி.எல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனை தொடர்ந்து விளையாடிய மும்பை இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இதனால் சென்னை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4ல் வெற்றி, 8-ல் தோல்வி என பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

கட்டுப்படுத்துவது... 

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது., விக்கெட் எப்படி இருந்தாலும், 130 ரன்களுக்கு கீழே உள்ள ஸ்கோரை கட்டுப்படுத்துவது மிக கடினம்.எங்கள் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் நன்றாகப் பந்துவீசினார்கள், நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் தங்களைத் தாங்களே நம்புவதற்கு இது போன்ற ஒரு விளையாட்டு அவர்களுக்கு உதவுவதாக  நம்புகிறேன். மேலும் சில பேட்ஸ்மன்கள் நல்ல பந்துகளில் ஆட்டமிழந்தனர். அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

களமிறங்கக்கூடியவர்...

முன்னதாக டாஸ் நிகழ்வின் போது ஜடேஜா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு டோனி பதில் அளித்தார். ஜடேஜா விளையாடாதது அணிக்கு எத்தகைய இழப்பு என டோனி கூறுகையில், "அவர் அணியில் இருந்தால் எங்களால் பலவித "காம்பினேஷன்"-களையும் முயற்சி செய்து பார்க்க முடியும். எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடக்கூடியவர்.  சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் இடத்தை நிரப்புவது மிகக் கடினம். அவரைப் போல் யாரும் பீல்டிங் செய்ய முடியாது. அந்த விதத்தில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் டோனி தெரிவித்தார்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி...

ஜடேஜா அணியில் இருந்து விலகியது காயம் காரணமாக அல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போது ஜடேஜா குறித்து டோனி இவ்வாறு பேசியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து