முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால் மருத்துவப் பல்கலை.யில் இருந்து 104 இந்திய மாணவர்கள் நீக்கம்

சனிக்கிழமை, 14 மே 2022      இந்தியா
Indian-students 2022-05-14

Source: provided

புது டெல்லி : செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால், உக்ரைனின் தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து, தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 104 இந்திய மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், அங்குள்ள தேசிய மருத்துவப் பல்கலைக் கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் அதிகமாக சிக்கிய இந்தியரை மீட்க, பிரதமர் மோடியின் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் அமர்த்தப்பட்டன. இதன் மூலமாக, மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வரை அங்கு பயிலும் இந்தியர்களில் சுமார் 5,000 தமிழர்கள் உட்பட 20,000 மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் தங்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தொடரும் வகையில் அனுமதி கோரி தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்டப் பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தன. இதை பரிசீலனைக்கு ஏற்ற மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் ஆலோசனை கேட்டிருந்தது. இதன் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், போர் தொடங்கிய பின்னர் உக்ரைன் பல்கலைக் கழகங்கள் ஒரு சிறு இடைவெளி விட்டிருந்தன. பின்னர் தாய்நாடு திரும்பிய மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளை தொடங்கின.

இந்நிலையில், செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை செலுத்தும்படி மாணவர்களுக்கு உக்ரைன் மருத்துவப் பல்கலைக் கழகங்கள் அறிவுறுத்தின. இந்தியாவிலேயே மருத்துவக் கல்வியை தொடரலாம் என்ற நம்பிக்கையில் பலரும் செமஸ்டருக்கான கட்டணங்களை செலுத்தவில்லை. இதனால், உக்ரைனின், டினிப்ரோ மெடிக்கல் இன்ஸ்டிடியூட் எனும் மருத்துவப் பல்கலைக் கழகம், 104 இந்திய மாணவர்களை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து