எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று போக்குவரத்துத் துறை சார்பில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2500 மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியின் முதற்கட்டமாக 500 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த முன்னோட்ட வெளியீட்டின் நோக்கம், நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதும், காவல் துறை மற்றும் மருத்துவ அவசர ஊர்தியின் கட்டளை மையத்துடன் நேரடி தொடர்பு கொள்வதாகும். இதற்காக, ஒவ்வொரு பேருந்திலும் மூன்று கேமராக்கள், நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR) 4G GSM SIM வழியாக கிளவுட் (Cloud) அடிப்படையிலான கட்டளை மைய பயன்பாட்டுடன் இணைக்கப்படும்.
இம்முழு அமைப்பும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை வழியாக கண்காணிக்கப்படும். இதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கான தகவல் மையம் (Data Center) கிளவுட் (Cloud) உடன் இணையும். பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசௌகரியங்களின் போதும், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போதும், அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், கட்டளை மையத்தில், பேருந்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவின் சில வினாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த ஒலி தூண்டுதலை கொண்டு, செயலியை இயக்குபவர் நிலைமையைக் கண்காணித்து, நிகழ்நேர அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வார். இதற்காக கட்டளை மையம், காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் அவசரகால பதில் மையத்துடன் இணைக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டின் போது, நிகழ் நேர அவசர அழைப்புகள் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் மற்றும் 35 பேருந்து முனையங்கள் முழுவதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறை, காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் பல வகையான பயன்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
மேலும், அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் (மாநகர் போக்குவரத்துக் கழகம் நீங்கலாக) மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் பணியாற்றி, பணியின் போது உயிரிழந்த 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், 5 ஓட்டுநருடன் கூடிய நடத்துனர், 21 ஓட்டுநர்கள், 106 நடத்துனர்கள், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் 4 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் கே.கோபால், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்று 89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
17 Nov 2025சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு அரவது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
-
ரஷ்யாவிடம் 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
17 Nov 2025புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
17 Nov 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கு உதவ மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவு
17 Nov 2025கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவையான உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது
17 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
டெல்லி கார் வெடி குண்டு விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
17 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடி குண்டு விபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்?
17 Nov 2025மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
-
உலகக் கோப்பையில் அதிகமுறை பங்கேற்பு: புதிய சாதனை படைக்கிறார்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ
17 Nov 2025போர்ச்சு : மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ அடுத்தாண்டு உலகக் கோப்பையில் விளையாடி சாதனை நிகழ்த்தவிருக்கிறார்கள்.
அபார வெற்றி...
-
சவுதி அரேபியா சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு
17 Nov 2025மெக்கா: சவுதி விபத்தில் ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.


