முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      விளையாட்டு
CM-2 2022 05 15

Source: provided

சென்னை : தாமஸ் கோப்பை போட்மிண்டன் போட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் போட்டியில், 12-ம் தேதி நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டி பாங்காக்கில் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் இந்திய அணி 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை எதிர்கொண்டது. இதில், இந்திய வீரர் லக்சயா சென் முதல் போட்டியில் 8-21, 21-17,  21-16 என்ற புள்ளி கணக்கில்  அந்தோணி கின்திங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இறுதி போட்டியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.

அதை தொடர்ந்து இரண்டாவது சுற்றில் இந்திய இணை சாத்விக் - சிராக் இணை வெற்றி பெற்றனர். 3-வது போட்டியில் இந்திய அணியின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தாமஸ் கோப்பையை  வென்றது. தாமஸ் கோப்பையின் 73 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர்,  14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி முதன்முறையாக இந்திய அணி தாமஸ் கோப்பையை வென்றுள்ளது.  இந்திய விளையாட்டுத் துறைக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிகு நாள். இந்தியா இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிகு வெற்றியைப் பதிவு செய்ய உதவிய வீரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து