முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களிப்பு: இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      உலகம்
Gotabhaya-Rajapaksa 2022-05

பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நாடாளுமன்ற துணைத் தலைவராக அஜித் ராஜபட்சே தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அதிபர் கோத்தபய ராஜபட்ச மீது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 68 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதற்கிடையே நாடாளுமன்ற துணைத் தலைவருக்கான தேர்தலில் அஜித் ராஜபட்ச மற்றும் ரோஹினி கவிரத்ன ஆகியோர் போட்டியிட்டனர். இதில், அஜித் ராஜபட்சவுக்கு ஆதரவாக 109 வாக்குகளும், ரோஹிணிக்கு எதிராக 78 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, இந்த தேர்தலில் அஜித் ராஜபட்ச வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!