முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையில் விண்ணப்பிக்க மேலும் அவகாசம் : மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
children 2022-05-17

Source: provided

சென்னை : இன்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு  25 சதவீதம் இட ஓதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற  20 -ந் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரை இணையதளம் வழியாக பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25 சதவீதம் சேர்க்கைக்கு மே 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!