முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோற்று விட்டதாகவே நினைத்தேன் திரில் வெற்றி குறித்து ராகுல் பேட்டி

வியாழக்கிழமை, 19 மே 2022      விளையாட்டு
19 Ram 52

Source: provided

மும்பை:கடைசி 2 பந்தில் ஸ்டானிஸ் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற வைத்தார் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

தோற்று விட்டதாக...

இந்த வெற்றியின் மூலம் லக்னோ பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது.,  நாங்கள் இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருப்போம். தோற்று விட்டதாகவே உணர்வு ஏற்பட்டது. இந்த சீசனில் இது போன்ற ஆட்டங்களை தவறவிட்டோம். பல ஆட்டங்கள் கடைசி ஓவர் வரை சென்றதில்லை. சில போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று இருக்கலாம். வெற்றியுடன முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிகுந்த பதற்றம்...

கிரிக்கெட்டின் சிறப்பான ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்திய பெருமை உண்டு. கடைசியில் எங்களுக்கு மிகுந்த பதற்றம் ஏற்பட்டது. கடைசி 2 பந்தில் ஸ்டானிஸ் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற வைத்தார். அவர் புத்திசாலிதனமாக வீசினார். எங்களது பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த தோல்வி மூலம் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!