முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலை ரூ. 7 குறைப்பு : மத்திய அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 21 மே 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது.

உலக அளவில் பணவீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

மத்தியில் பா.ஜ.க. அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது. இதன் விளைவாக, பா.ஜ.க.வின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதாக கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. 

அதன்படி, பெட்ரோலை பொறுத்தவரை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயையும் குறைத்துள்ளோம். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதனால், மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது. கடந்த 40 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்தச் சூழலில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து