முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது

திங்கட்கிழமை, 23 மே 2022      தமிழகம்
Doctor 2022-05-23

Source: provided

சென்னை :  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,000 மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்காகவும், பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வும் இன்று தொடங்கி 6 நாட்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், இந்த முறை 4,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் மருத்துவ கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, ஊரக மருத்துவ பணிகள் துறை சார்பில் உள்ள மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள மருத்துவர்களுக்கான பணியிடங்கள் சமன் செய்யப்படுவதோடு, புதிய காலிப் பணியிடங்கள் கண்டறியப்படும் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து