முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' இருக்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      உலகம்
Modi-2 2022-05-24

Source: provided

டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. ஜப்பானில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

டோக்கியாவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரை தொடர்ந்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், "கொரோனா நெருக்கடி காலத்தில் குவாட் கூட்டமைப்பு நாடுகள் ஒருவொருக்கு ஒருவர் தடுப்பூசிகளை வழங்கி உறுதுணையாக இருந்துள்ளது. காலநிலை மாற்றம், வழங்கல் சங்கிலி, பேரிடர் மேலாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு என பல வகையிலும் குவாட் நாடுகள் ஒற்றுமையுடன் திகழ்கின்றன.

இது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது. குவாட் கூட்டமைப்பு ஸ்திரமான கொள்கையுடன் முன்னேறிச் செல்கிறது. இது இன்னும் வலுவான கூட்டமைப்பாக உருவாகும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து