முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஐ.பி.எல்-லில் இருப்பேன்: ஆர்சிபி ஜாம்பவான் டிவில்லியர்ஸ்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      விளையாட்டு
DeVilliers 2022-05-24

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் பெங்களூரு அணிக்காக மட்டும் அவர் 156 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011 முதல் 2021 வரையில் பெங்களூரு அணியில் அவர் இடம் பெற்றிருந்தார். நடப்பு சீசனில் அவர் விளையாடப் போவதில்லை என முன்னதாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த சீசனில் (ஐபிஎல் 2023) தனது வருகை குறித்து பேசியுள்ளார் டிவில்லியர்ஸ்.

"அடுத்த சீசனில் நான் நிச்சயம் இருப்பேன். ஆனால் அது எப்படி என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இதனை விராட் கோலி உறுதிப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி. வரும் சீசனில் பெங்களூருவில் சில போட்டிகள் இருக்கும். அதனால் எனது இரண்டாவது வீட்டுக்கு திரும்புவதில் எனக்கு மகிழ்ச்சி. சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வாழும் அந்த காட்சியை காண நாம் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அணியில் மீண்டும் இணைவதை நான் மிகவும் விரும்புகிறேன். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்தும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா தோல்வி..!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, அமெரிக்காவைச் சேர்ந்த அமெண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார். 

இதில் நவோமி ஒசாகா 5-7, 4-6 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

பெண்கள் டி20 கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் வெற்றி

3 அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல்பிளேசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த சூப்பர்நோவாஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட்செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன், ஹர்லின் தியோல் 35 ரன், டாட்டின் 32 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரையல் பிளேசர்ஸ் ஆடியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் டிரையல் பிளேசர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் நோவாஸ் சார்பில் பூஜா வஸ்த்ராசாகர் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் 277 ரன்கள் குவிப்பு

இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம். 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

போட்டியின் 23-வது ஓவரில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அணியின் உதவியாளர்கள் உதவியுடன் வெளியேறிய அவர், டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இதயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை, தசைப்பிடிப்பு தான் வலிக்கு காரணம் என தெரிய வந்ததால் இலங்கை அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.

எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆடுவோம்: சஹா நம்பிக்கை

24-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “பிளேஆப்” சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நான்கு நாட்களுக்கு முன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளேஆப் சுற்றின் ‘குவாலிலையர் 1’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த நிலையில் எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-குஜராத் அணிக்காக நான் விளையாடுகிறேன். எனவே எனது சொந்த மைதானம் அகமதாபாத் மொதேரா ஸ்டேடியம் ஆகும். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக நான் நீண்ட காலம் ஆடவில்லை. இதனால் ஈடன் கார்ன் எனது சொந்த மைதானம் அல்ல. எந்த மைதானத்திலும் குஜராத் அணி சிறப்பாக விளையாடும். ந்திய அணிக்கான தேர்வு குறித்து நான் நினைக்கவில்லை. இவ்வாறு விர்த்திமான் சஹா கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவில் ஹாக்கி: இந்தியா - பாக். ஆட்டம் டிரா

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதன் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக வீரரான செல்வம் கார்த்தி கோல் அடித்தார். தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி அடித்த கோலால் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.

 

இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரு அணி வீரர்களுமே பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றத் தவறினர். போட்டி முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ராணா கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமநிலையை எட்டியது. இதற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வீரர்கள் முயன்ற போதிலும் சாத்தியமாகவில்லை. முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந் தது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!