முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் எண்ணெய், கோதுமையை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

புதன்கிழமை, 25 மே 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எண்ணெய், கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை போல சூழலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.

சமையல் எண்ணெயை தொடர்ந்து இந்தியாவில் கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் விலையும் அண்மையில் உயர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. இதனால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி கடந்த 2 மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் கோதுமை ஏற்றுமதிக்கு தற்காலிகமாக மத்திய அரசு தடை விதித்தது.

இந்தநிலை கோதுமையை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சர்க்கரை ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள அரசு, அதனை அக்டோபர் 31 முதல் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் சர்க்கரை இருப்பினை அதிகரிக்கவும், அதன் மூலம் அதிகரித்து வரும் விலைவாசியினை தடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

எனினும் டிஜிஎப்டி உத்தரவின் படி உணவு மற்றும் பொது விநியோகத் துறை இயக்குனரகத்தின் ஒப்புதலுடன் சர்க்கரை ஏற்றுமதி பகுதியளவு செய்யபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சர்க்கரை ஏற்றுமதியினை 100 லட்சம் மெட்ரிக் டன்னாக கட்டுப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்றுமதியினை தடை செய்வதன் மூலம், அதன் விலையினை குறைக்க முடியும் என்ற அரசு நம்புகிறது. மொத்த உணவு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!