முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஐடியா

சனிக்கிழமை, 28 மே 2022      உலகம்
Trump 2022 26

டெக்சாஸ் தொடக்க பள்ளி படுகொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்காததன் காரணமாகவே இம்மாதிரியான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மத்தியில், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் சார்பில் அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்,  தேசிய துப்பாக்கி கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப், சட்டத்தை மதிக்கும் குடிமக்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்காமல் இருப்பதற்கு காரணம் தீய சக்திகளின் இருப்பு. சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கு மிக முக்கிய காரணம் தீய சக்திகளின் இருப்பு.    இடதுசாரிகள் கொண்டு வர நினைக்கும் துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிகளால் இம்மாதிரியான பயங்கர சம்பவங்களை தடுக்க முடிக்க முடியாது என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், மாநில அளவில் அரசின் அனைத்து மட்டங்களிலும் ஜனநாயகவாதிகள், குடியரசு கட்சியினர் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பள்ளிகளை இறுதியாக உறுதியாக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பை மேலிருந்து கீழ் மட்டத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து