முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 28 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர். 

இந்த நிலையில் திருவேற்காட்டில் நேற்று பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  

பா.ம.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மரு.அன்புமணி ராமதாசுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.  சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!