முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் போராட்டம் எதிரொலி: இலங்கை தமிழர் குடும்பம் குடியேற அனுமதி அளித்தது ஆஸ்திரேலிய அரசு

சனிக்கிழமை, 28 மே 2022      உலகம்
Australia 2021-12-28

ஆஸ்திரேலிய மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து இலங்கை தமிழ் குடும்பத்திற்கு அந்நாட்டு அரசு குடியேற்ற அனுமதி வழங்கி இருக்கிறது. 

இலங்கையை சேர்ந்த பிரியா நடராஜா என்பவரும், நடேஷ் முருகப்பர் என்பவரும் படகு மூலம் 2012ம் ஆண்டு இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா வந்தனர். அடைக்கலம் கூறி இருவரும் ஆஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்ததை அடுத்து அவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட்டது. குடியேறிகளுக்கு வேலை வழங்கும் இறைச்சி கூடங்களை கொண்ட பில்லாயிலா நகரில் அவர்கள் கூடியேறியபோது இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

அவர்களுக்கு கோபிகா, தார்மிகா என்ற பெண் குழந்தைகள் பிறந்தன. ஆஸ்திரேலியாவில் பிரியா நடேசனின் விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியை பெறுவதற்கான வரைமுறைகள் அவர்களுக்கு இல்லை என ஆஸ்திரேலிய அரசு கூறிவிட்டது. 2018ம் ஆண்டு நடேஷ் முருகன் குடும்பத்தின் தற்காலிக விசா காலாவதியான போது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி நடந்தது. அப்போது பில்லாயிலா நகரத்தை சேர்ந்தவர்கள் நடேஷ் முருகப்பர் குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் அந்தோணி, நடேஷ் முருகப்பர் குடும்பத்திற்கு தனது அரசு விதிவிலக்கு அளிக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி  ஆஸ்திரேலியாவின் புதிய அரசு பிரியா நடேஷ் முருகப்பர் குடும்பத்திற்கு விசா வழங்கியுள்ளது. அவர்கள் தற்காலிகமாக பில்லாயிலா நகரத்தில் வசிக்கவும், வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு காவல் வைக்கப்பட்டுள்ள நடேஷ் முருகப்பர் குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்கு திரும்புவதற்காக 4 ஆண்டுகால போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து