முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி சிலை திறப்பு விழா: நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

சனிக்கிழமை, 28 மே 2022      சினிமா
Rajini 2022-05-28

Source: provided

சென்னை : ஓமந்தூராா் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். 

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!