முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வசூல் சாதனை படைத்த விக்ரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      சினிமா
Vikram 2022 06 19

Source: provided

விக்ரம் படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் அணிரூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய தயாரிப்பாளர் கேயார் தமிழ் சினிமாவின் மானத்தையும் மரியாதையையும் காப்பாற்றிய படம் விக்ரம் என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், வெளிநாடுகளில் இப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டது, கேரளாவில் தற்போது வரை 35 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.75 கோடி ஷேர் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். பின்னர் பேசிய கமல்ஹாசன், கடந்த 10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாம் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான். உடன் நின்றவர்களால் தான் வெற்றி சாத்தியமானது. உண்மையான வள்ளல்கள் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. பத்தல பத்தல என்று பாடல் எழுதினேன் ஆனால் எனக்கு பத்திக்கொண்டது. உதயநிதியை தனியாக பாராட்ட வேண்டும் பெருங்கிளையாக ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனத்தை உயதயநிதி வளர்க்க வேண்டும் தொடர்ந்து உதயநிதி திரைப்படங்களை விநியோகம் செய்ய வேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களையும், தட்டிக்கொடுக்கும் பாராட்டுகளையும் ஊடகங்கள் தந்தன. தரமான சினிமா எடுக்கவேண்டியது நம் கடமை என்று பேசி முடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து