முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்: விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி அமலாக்கதுறைக்கு சோனியா காந்தி கடிதம்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Sonia 2022 06 17

Source: provided

புதுடெல்லி : ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி அமலாக்கதுறைக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியன்' நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இதில் நடைபெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

ராகுல்காந்தியிடம் கடந்த 13, 14, 15, 20 மற்றும் 21-ம் தேதிகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ராகுல் காந்தியிடம் மொத்தம் 60 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று (23 ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜர் ஆவதை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்தத் தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-" கொரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டதால் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

எனவே, தான் முழுமையாக குணம் அடையும் வரை சில வாரங்கள் அமலாக்கத்துறை முன் ஆஜர் ஆவதை தள்ளிவைக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!