முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      தமிழகம்
vijayakanth-2022-06-23

Source: provided

சென்னை ; நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்தார்.

நடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்.விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். சமீபத்தில் விஜயகாந்த் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தே.மு.தி.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்..விஜயகாந்த்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறித்துள்ளார். விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பிரதமர் மோடி வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து