முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூற்றுக்கணக்கானோர் பலி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு உதவ இந்தியா உறுதி

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      இந்தியா
arintham2022-06-23

Source: provided

புதுடெல்லி ; நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் பலியான சம்பவத்தில் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. 

நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, சுமார் 1,000 பேர் பலியாகினர். 1,500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்க உறுதி பூண்டுள்ளது.

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்தியா அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் மக்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், தேவைப்படும் இந்த நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்க உறுதியுடன் இருக்கிறோம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!