முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      இந்தியா
Missile-test--2022-06-24

போர்கப்பலில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. டி.ஆர்.டி.ஓ.வுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

போர்கப்பலில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் நவீன திறன் கொண்ட ஏவுகணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்தது. நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் சண்டிபூர் பகுதியில் நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. இதற்காக வான் பரப்பில் தொலைதூரத்தில் அதிவேகமாக செல்லும் விமானம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து, ஏவுகணையை இயக்கியவுடன் போர்கப்பலில் இருந்து பாய்ந்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் அந்த விமானத்தை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனையடுத்து ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததால் இந்திய ராணுவத்தில் விரைவில் இந்த ஏவுகணை இணைக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதையடுத்து கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து