முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
Parlimenat 2022 06 03

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதையடுத்து 25-ம் தேதி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார். குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும். புதிய குடியரசு துணைத் தலைவர் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!