முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின், அசாரூதின் சாதனையை சமன்செய்த ஜடேஜா,ரிஷப் பன்ட்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      விளையாட்டு
Rishab-Bund-Jadeja 2022 07

Source: provided

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, ரிஷப் பன்ட் ஜோடி இணைந்து 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 222 ரன்களை எடுத்து சச்சின்-அசாரூதின் சாதனையை சமன்செய்துள்ளனர். 

பார்னர்ஷிப்பில்... 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஜூலை-1) தொடங்கியது. இதில் ரவீந்திர ஜடேஜா - ரிஷப் பன்ட் இணைந்து 6வது விக்கெட் பார்னர்ஷிப்பில் 222 ரன்களை குவித்தனர். 98-5 என்ற மோசமான நிலையில் இருந்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். ரிஷப் பந்த 111 பந்துகளில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 163 பந்தில் 83 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 

அதிக ரன் எடுத்த ஜோடிகள்:

1) அசாரூதின், சச்சின்   222 (தென்னாப்ரிக்கா).

2) ஜடேஜா, ரிஷப் பன்ட்  222 (இங்கிலாந்து).

3) அஸ்வின், சாஹா       213 (மே.இ.தீவுகள்).

4) தோனி, இ பதான்       210 (பாகிச்தான்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!