முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் மீட்புபணி பாதிப்பு: மணிப்பூர் நிலச்சரிவிற்கு பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      இந்தியா
Manipur 2022 07 02

Source: provided

இம்பால் : மணிப்பூரில் மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலசரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். 

இந்நிலையில், நேற்று 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 37- பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 24 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் மாயமான 25 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

எனினும், அப்பகுதியில் மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 13 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 5 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!