முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறி விழுந்து எலும்பு முறிவு: மருத்துவமனையில் லல்லு பிரசாத் அனுமதி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      இந்தியா
Lalu 2022-07-04

Source: provided

பாட்னா : ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்புடைய வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக ஜாமீனில் வெளியே உள்ளார். 

பாட்னாவில் உள்ள வீட்டில் இருக்கும் அவர், ஞாயிற்றுக்கிழமை மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் அவரது தோள்ப்பட்டையில் லேசான எலும்பு முறிவு மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் லல்லு அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து