முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை

புதன்கிழமை, 6 ஜூலை 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கோழியாளம் என்னும் கிராமத்தில் இரட்டை மலை – ஆதியம்மாள் தம்பதியினருக்கு 07.07.1859 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார் இரட்டைமலை சீனிவாசன். தன் வாழ்நாள் முழுவதும் ஆதிதிராவிட, பழங்குடியின சமுதாயத்திற்கு அயராது உழைத்து,  தான் சார்ந்த சமுதாயத்தினருக்கு ஒரு ஞானியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்து நன்மதிப்பை அவர் பெற்றுள்ளார்.  

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாள் விழா இன்று 07.07.2022 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!