முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

புதன்கிழமை, 6 ஜூலை 2022      தமிழகம்
Container-lorry 2022-07-06

Source: provided

சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாடகை உயர்த்தி தரக்கோரி கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பு என்ற பெயரில் அனைத்து அமைப்புகளும் கடந்த 4-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகங்களில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை துறைமுக அதிகாரிகள் தமிழக அரசின் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் பெட்டக முனைய உரிமையாளர்கள் கண்டெய்னர் துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் என பல்வேறு அமைப்புகள் அமைப்புகளுடன் சென்னை துறைமுகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடரும் இந்த வேலைநிறுத்தத்தினால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!