எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீடு...
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், ‘‘அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை என்பது, ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும். இந்நிலையில், ஒற்றைத் தலைமை கருத்து எழுந்தவுடன், கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவைத் தடுக்க அவர் பல்வேறு வழிகளில் முயன்றார்.
அமைதியாக நடந்தது...
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்குமாறு ஆவடி காவல்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பொதுக்குழு அமைதியாக நடந்தது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமையுடன், கட்சி சிறப்பாக வழிநடத்தப்பட வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாகும். ஆனால், கட்சித் தொண்டர்கள், தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.
ஒத்துழைப்பு தரவில்லை...
உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த, அவர் உரிய ஒத்துழைப்பு தரவில்லை. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், அவர் பங்கேற்கவில்லை. கட்சியின் பொருளாளர் அவர்தான். கட்சி நிதியை அவர் விடுவிக்காததால், அ.தி.மு.க அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் கடமையை செய்யாமல், கட்சியின் நலனைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒப்புதல் கடிதம் மூலம்...
கடந்த ஜூன் 23-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் வாயிலாக, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கையும், நம்பிக்கையையும் முற்றிலுமாக இழந்துவிட்டார். எனவேதான், அவர் எங்களுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகிறார். வரும் 11-ல் நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
தடை கோருகிறார்...
இந்நிலையில்தான், தனக்குப் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கும் தடை கோருகிறார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, கட்சியின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க நினைக்கிறார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இ.பி.எஸ். மனுவில் தெரிவித்திருந்தார்.
தலையிட விரும்பவில்லை...
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தினேஷ், மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூலை 6) காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் "ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட விரும்பவில்லை, கூட்டத்தை நடத்தலாம். ஆனால், இடைப்பட்ட நாள்களில் யாருக்காவது நிவாரணம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி அமர்வை அணுகலாம்.
இடைக்கால தடை...
23 தீர்மானங்களை தவிர்த்த மற்ற தீர்மானங்கள் குறித்து விவாதிக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில், தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
யாரிடமும் பேதம் காட்டாமல், யாரையும் பிரித்து பார்க்காத ஒரே மொழி 'தமிழ்' மொழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
11 Jan 2026சென்னை, தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எப்பொழுதுமே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக அமைச்சர் தகவல்
11 Jan 2026சென்னை, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்ப
-
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Jan 2026சென்னை, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் ம
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
11 Jan 2026தெக்ரான், ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.
-
கருக்கலைப்பு விவகாரம்: ஐகோர்ட் முக்கிய கருத்து
11 Jan 2026டெல்லி, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jan 2026சென்னை, தமிழகத்தில் கடலூர், அரியலூர் உள்ளிட்ட இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் சூட்டினார் முதல்வர்
11 Jan 2026சென்னை, ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
-
ராகுல் நாளை கூடலூா் வருகை
11 Jan 2026நீலகிரி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு நாளை வருகை தரவுள்ளாா்.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
-
17 வணிக செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்
11 Jan 2026சென்னை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
குஜராத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் : சவுரியா யாத்திரையிலும் பங்கேற்பு
11 Jan 2026அகமதாபாத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார்.


