முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா வெளியிட்ட 11 குற்றவாளிகள் பட்டியலில் 9 பேர் இந்தியர்கள்

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      உலகம்
canada 2022 08 04

கனடாவில் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட 11 முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 11 பேரையும் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு கனடா காவல்துறை, அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

பிரிட்டிஷ் கொலம்பியாவி சிறப்பு ஆயுதப் படை, வான்கோவர் காவல்துறை மற்றும் பிசி ராயல் கனடியன் மௌண்டட் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கான இந்த எச்சரிக்கையை அளித்துள்ளது.  இந்த 11 பேரும், பல்வேறு மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதும், இவர்கள் குழுக்களாக இணைந்து செய்திருக்கும் குற்றங்கள் கனடா பேராபத்தை ஏற்படுத்துபவை என்றும், இவர்களால் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!