முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் பேட்மிண்டன்: லக்‌ஷயா சென், ஆகர்ஷி காஷ்யப் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
common-wealth------2022-08-05

Source: provided

பர்மிங்காம்: காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், ஆகர்ஷி காஷ்யப் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

20 பதக்கங்கள்...

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது .இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் லக்‌ஷயா சென் ,செயின்ட் ஹெலனா வீரர் வெர்னான் ஸ்மீட் உடன் மோதினார்.

காஷ்யப் வெற்றி...

இந்த போட்டியில் லக்‌ஷயா சென் 21-4, 21-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றோரு போட்டியில் (ரவுண்டு ஆப் 32) மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் பாகிஸ்தான் வீராங்கனை மஹூர் ஷாஜாத் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில்  ஆகர்ஷி காஷ்யப் 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 2வது சுற்றில் மஹூர் ஷாஜாத்க்கு காயம் ஏற்பட்டது.இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.இதனால் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!