முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த தைவான் பாதுகாப்பு அமைச்சக ஆராய்ச்சி பிரிவின் துணைத்தலைவர்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      உலகம்
Taiwan 2022-08-06

Source: provided

தைபே : தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். 

தைவான் - சீனா பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சீன ராணுவம் தைவான் எல்லை பகுதிகளில் ஏவுகணை சோதனையை ஆரம்பித்துள்ளது. இதை அமெரிக்கா மற்றும் தைவான் கண்டித்துள்ளன. தைவான் தீவுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தைவானுக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. 

தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் நேற்று காலை ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் ஓ யாங் லி-ஹ்சிங் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இதய நோய் இருந்ததாகவும், இதயத்தில் ஸ்டென்ட் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இந்த நிலையில், அவர் தனிப்பட்ட வேலைகளுக்காக தெற்கு தைவான் சென்று ஒட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று அதிகாலை திடீர் நெஞ்சு வலி எற்பட்டதாக தெரிகிறது. அவர் அருகே யாருமில்லாததால் அவர் போராடி உயிரிழந்தார் எனத் தெரிகிறது. 57 வயதான யாங், மாரடைப்பால் தான் இறந்தார் என்றும், அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் எந்தவிதமான ஊடுருவல் இருந்ததற்கான அறிகுறியும் இல்லை. ஆகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து