முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறும் எரிமலை வெடிப்பை காணக்குவியும் மக்கள்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      உலகம்
Iceland 2022-08-06

Source: provided

ஐஸ்லாந்து : ஐஸ்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையம் அருகே இரு தினங்களுக்கு முன்னர் வெடிக்க தொடங்கிய எரிமலையிலிருந்து லாவா குழம்பு வழிந்தோடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

ஐஸ்லாந்து தலைநகரான ரேக்ஜவிக்கிள் இருந்து 32கி.மீ. தொலைவிலும், அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பக்ராடால்ஸ்பியால் எரிமலை. அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி எரிமலை வெடிக்க தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் எரிமலையிலிருந்து புகையுடன் கூடிய லாவா குழம்பு வெளியேறி வருகிறது.

எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எரிமலை வெடித்துச் சிதறுவதை காண, அப்பகுதியில் எச்சரிக்கையும் மீறி ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அதே போல விமான போக்குவரத்தும் தடையின்றி செயல்பட்டு வருகிறது. எரிமலை வெடிப்பின் தொடக்க கட்டத்தில் அதன் பாதிப்புகளை முழுமையாக கூற முடியாது என்றாலும் அதிலிருந்து விஷவாயுகள் வெளியேறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இதே எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு சுமார் 6 மாதங்கள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து