முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்டந்தோறும் மாலை நேர உழவர் சந்தைகள் : முதல்வர் ஸ்டாலின் 12-ம் தேதி திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2022 01 28

Source: provided

சென்னை : மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் மாவட்டந்தோறும் மாலை நேர உழவர் சந்தைகளை வரும் 12-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  

கருணாநிதி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட உழவர் சந்தைகள் கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கண்டு கொள்ளாமல் கிடந்தது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் உழவர் சந்தைகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.

பாழடைந்து கிடந்த உழவர் சந்தைகள் புதுப்பொலிவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இதனால் தமிழ்நாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டு வருகிறது. 

இப்போது இந்த உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாலை நேர உழவர் சந்தை மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 37 மாவட்டங்களிலும் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த உழவர் சந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந்தேதி திறந்து வைக்கிறார். 

இங்கு பயிறு வகைகள், சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், விழுப்புரம் ஆகிய ஊர்களில் மாலை நேர உழவர் சந்தைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மற்ற ஊர்களில் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து