முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 26 ல் வெளியாகும் நெடுநீர்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      சினிமா
Neduneer 2022-08-08

Source: provided

கவின் கிரியேட்டர்ஸ் சார்பில் வி.எஸ்..பாளையம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் கு.கி.பத்மநாபன் இயக்கியுள்ள படம் நெடுநீர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர், பதின் பருவ சிறுவனும், சிறுமியும் சூழலால் துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர். இந்நிலையில் ஒரு நாள் நள்ளிரவில் இருவரும் பிரிய நேர்கிறது. எட்டு வருடங்கள் கழித்து மருத்துவ உதவியாளராக அந்த பெண்ணும் அடியாளாக அவனும் சந்திக்கிறார்கள். இனி என்ன ஆகும் என்பதே படத்தின் கதை என்று கூறினார். முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் படமாகவே அமைந்துள்ள இப்படத்தில் 4 பாடல்களும், 6 சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் புதுமுக நட்சத்திரங்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு போதிய நடிப்பு பயிற்சி அளித்து படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரி கன்னியக்கோயில் பகுதி, கடலூர் துறைமுகம், கடலூரின் கடலோர கிராமங்கள் மற்றும் வி.எஸ்.பாளையம் போன்ற இடங்களில் 51 நாட்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தின் மக்கள் தொடர்பு வெங்கட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து