முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை துறைமுகத்தை நோக்கி பயணத்தை தொடங்கிய சீன கப்பல்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      உலகம்
China-ship 2022-08-09

Source: provided

கொழும்பு : இலங்கையின் வேண்டுகோளை மீறி, சீன கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா ஆழ்கடல் துறைமுகத்துக்கு சீனாவின் யுவான் வாங்-5 என்ற போர்க்கப்பல், வர இருப்பதாக சீனா அறிவித்தது. பின்னர் அதை இலங்கை அரசு உறுதி செய்தது.

நாளை 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்த கப்பல் செயற்கைக்கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் என சீனா தெரிவித்திருந்தது. 

ஆனால் சீன கப்பல் ஒரு உளவு கப்பல் என்றும், அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இலங்கை அரசிடம் இந்தியா தெரிவித்தது. இதையடுத்து  யுவான் வாங்-5 கப்பலின் பயணத்தை ஒத்திவைக்கும்படி சீனாவுக்கு இலங்கை அரசு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் இலங்கையின் வேண்டுகோளை மீறி, சீன கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுமார் 23 ஆயிரம் டன் எடை கொண்ட யுவான் வாங்-5 கப்பல், 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தோனேசியா கடற்கரையில் இருந்து வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கி வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஹம்பந்தோட்டா துறைமுகத்தை வந்தடையும் என்றும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து