முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எப்.பி.ஐ. அதிகாரிகள் டிரம்பின் எஸ்டேட்டில் திடீர் சோதனை : இது இருண்ட காலம் என விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      உலகம்
Trump 2022-08-09

Source: provided

புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இது அமெரிக்காவுக்கு இருண்ட காலம் என டிரம்ப் விமர்சித்துள்ளார். 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவரது மர்-எ-லாகோ என்ற எஸ்டேட், புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி வந்து அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதனை டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார். ஆனால், இதுபற்றிய தகவல்கள் எதனையும் எப்.பி.ஐ. அமைப்பு வெளியிடவில்லை.

இதுபற்றிய அவரது அறிக்கையில், புளோரிடாவில் உள்ள தனது மர்-எ-லாகோ எஸ்டேட்டில் திடீரென வந்த எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

எனது வீட்டில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி வரும் தொடர்புடைய அரசு அமைப்புகளுடன் இணைந்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இந்த சோதனையின் ஒரு பகுதியாக எப்.பி.ஐ. ஏஜெண்டுகள் கட்டாயப்படுத்தி பணப்பெட்டி ஒன்றையும் திறக்க செய்தனர் என அவர் அதில் தெரிவித்து உள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், இது நமது தேசத்திற்கு இருண்ட காலமாகும், ஆயுதத்தை கொண்டு அமெரிக்க நீதி துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2024-ம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத சில தீவிர இடது ஜனநாயகக் கட்சியினரின் மறைமுக தாக்குதல் என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து