முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் ஒத்திகையால் படையெடுப்புக்குத் தயாராகிறது: சீனா மீது தைவான் வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      உலகம்
Taiwan 2022-08-09

போர் ஒத்திகை மூலம் படையெடுப்புக்கு சீனா தயாராகி வருவதாக தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ குற்றஞ்சாட்டியுள்ளார். வான்வழி, கடற்பரப்பில் ஒத்திகைகள் நடத்துவதே போர் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காகத் தான் என்றும அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றார். அவர் வருகைக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவந்த சீனா, அவர் வந்தபின்னர் எல்லையை ஒட்டி போர் ஒத்திகைகளை முடுக்கிவிட்டது.

இந்நிலையில் தலைநகர் தைபேவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் சீன வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ. அப்போது அவர் பேசுகையில், "சீனா பெரிய அளவில் ராணுவ ஒத்திகைகள், ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இணையதளங்களை முடக்கி வருகிறது. தைவான் பொருளாதாரத்தை முடக்கவும் முயற்சித்து வருகிறது. வதந்திகளைப் பரப்பி உள்நாட்டில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறது என்றார். இந்த இக்கட்டான நேரத்தில் மேற்குலகம் எங்களுக்கு துணையாக நிற்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

முன்னதாக, நான்சியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என தைவான் ராணுவம் பதிலடி அளித்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தாண்டியும், தைவான் எல்லையோரத்தில் சீனா தனது போர் பயிற்சிகளை தொடர்ந்தது. இதனை தைவான் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து தைவானின் வெளியுறவுத் துறை அமைச்சர், “சீனாவின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டுக்கின்றன. தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்துகின்றன. தைவானின் எல்லையில் ராணுவ பயிற்சியை நீட்டித்த சீனாவை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கண்டனம் தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து